முத்துப்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை அதிகரித்துள்ளதால் போலீசார் அடிக்கடி அதிரடி சோதனை செய்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து வருகின்றனர். நேற்று முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணியன், முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட பல்வேறு பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில் முத்துப்பேட்டையை அடுத்த தில்லைவிளாகம் கோவிலடி பகுதியை சேர்ந்த சேகர் மகன் சேதுராமன் (வயது25), வைரவன்சோலை கிராமத்தை சேர்ந்த வீரப்பன் மகன் இளையராஜா (38), இடும்பாவனம் பகுதியை சேர்ந்த முருகையன் மகன் மாதவன் (33), தில்லைவிளாகம் தெற்குகாடு கிராமத்தை சேர்ந்த ராமதாஸ் மகன் இளவரசன் (29), தம்பிக்கோட்டை கீழக்காடு வீரையன் மகன் வெற்றி (43) ஆகிய 5 பேர் லாட்டரி சீட்டு விற்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.