அறந்தாங்கி அங்காளம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் பூமதி (வயது 65). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் மூதாட்டி கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார். இதையடுத்து பூமதி சத்தம் போட்டதையடுத்து அவரை கீழே தள்ளிவிட்டு தங்கச்சங்கிலியுடன் மர்ம நபர் தப்பித்து சென்றுவிட்டார். இதுகுறித்து புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.