தமிழக செய்திகள்

5 ரூபாய் டாக்டர் திருவேங்கடம் மறைவுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல்

5 ரூபாய் டாக்டர் திருவேங்கடம் மறைவுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

வடசென்னை வியாசர்பாடி பகுதியில் 1973 ஆம் ஆண்டில் ரூ. 2 -க்குத் தொடங்கி பின்னர் ரூ.5-க்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்தார் மருத்துவர் திருவேங்கடம். 5 ரூபாய் டாக்டர் என்று அழைக்கப்படும் இவர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார்.

இதையடுத்து, மருத்துவரின் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் 5 ரூபாய் டாக்டர் திருவேங்கடம் மறைவுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

5 ரூபாய் டாக்டர் என அழைக்கப்பட்ட திரு. திருவேங்கடம் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மன வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்