சென்னை,
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இதேபோன்று, அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவற்றை மீறுவோர் மீது, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து உள்ளனர்.
இதன்படி, சென்னையில் கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறி முக கவசம் அணியாமல் 5 ஆயிரம் பேர் வரை சுற்றியுள்ளனர். அவர்களிடம், போலீசார் ரூ.200 வீதம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்து உள்ளனர். அதேபோல, சமூக இடைவெளி பின்பற்றாதது தொடர்பாக, 21 வழக்குகளை பதிவு செய்து, ரூ.10 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.