தமிழக செய்திகள்

வளையப்பட்டியில் தகுதிச்சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 5 வாகனங்கள் பறிமுதல்

வளையப்பட்டியில் தகுதிச்சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஸ்வரி ஆகியோர் திருச்சி சாலை நேற்று திடீர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்பேது அந்த வழியாக தகுதிசான்று இல்லாமல் இயக்கப்பட்ட 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் தார்பாய் போடாமல் மணல் ஏற்றி சென்ற லாரிகள், காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் புதுப்பட்டி அருகே சமீபத்தில் விபத்து நடந்த பகுதியை பார்வையிட்ட அவர்கள், அப்பகுதியை மேம்படுத்த நடவடிக்கைகளை மேற்கெள்ள தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தனர். இதேபோல் புதன்சந்தை பகுதியில் இருந்து கொல்லிமலைக்கு சொந்த வாகனத்தில் சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்வதாக வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சொந்த பயன்பாட்டிற்காக வாகனத்தில் சுற்றுலா பயணிகளை அழைத்து சென்ற காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு