தமிழக செய்திகள்

சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு.

தினத்தந்தி

சென்னை,

சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் ரஹ்மத் பெய்க் (வயது 50). 2022-ம் ஆண்டு இவர், 6 வயது சிறுமிக்கு பிஸ்கட் கொடுத்து அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் பெரவள்ளூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஹ்மத் பெய்க்கை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள 'போக்சோ' சிறப்பு கோர்ட்டில் நீதிபதி எம்.ராஜலெட்சுமி முன்னிலையில் நடந்தது. போலீசார் தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் டி.ஜி.கவிதா ஆஜராகி வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, ரஹ்மத் பெய்க் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை