தமிழக செய்திகள்

தைவான் நாட்டை சேர்ந்தவர் வீட்டில் ரூ.50 லட்சம் தங்க, வைர நகைகள் கொள்ளை

தைவான் நாட்டை சேர்ந்தவர் வீட்டில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

தினத்தந்தி

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் நி சியா சியாங். தைவான் நாட்டை சேர்ந்தவரான இவர், சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள பிரபல செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் பணி முடிந்து மதியம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த 25 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகள், இந்திய மதிப்பில் ரூ.1 லட்சம் அமெரிக்க டாலர் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பிளாட்டினம் வைத்திருந்த லாக்கர் பெட்டியை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

திருட்டுபோன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.50 லட்சம் என கூறப்படுகிறது.

இது குறித்து நி சியா சியாங் அளித்த புகாரின்பேரில் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு