தமிழக செய்திகள்

54-வது நினைவு தினம்: பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை..!

பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி, அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தினத்தந்தி

சென்னை,

முன்னாள் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அண்ணாவின் 54 ஆவது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. பேரணியின் முடிவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, பொன்முடி, மா.சுப்பிரமணியன், முத்துசாமி, எம்.ஆர்.காந்தி, உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி. டி.ஆர் பாலு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில், பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் தமிழ் உசேன், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தொண்டர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது