கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக 581 வழக்குகள் பதிவு..!

அதிகளவு சத்தத்தை எழுப்பக்கூடிய பட்டாசுகள் வெடித்ததாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சென்னை,

தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மக்கள் புத்தாடை அணிந்து, கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி, இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும், வாழ்த்துகளை பரிமாறியும் தீபாவளியை கொண்டாடினர்.

முன்னதாக தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதற்கு சென்னை மாநகர போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். காலை 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின்பற்றிட வேண்டும் என அறிவுறுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் சென்னையில் தீபாவளி பண்டிகையையொட்டி அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகளவு சத்தத்தை எழுப்பக்கூடிய பட்டாசுகள் வெடித்ததாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் அரசு விதிமுறைகளை மீறி பட்டாசு விற்பனையில் ஈடுபட்டதாக 7 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

செல்போன் எண்ணை ‘பிளாக்’ செய்த காதலன்..ஆத்திரத்தில் காதலி செய்த கொடூரம்

இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக விவாதிக்கக் கோரி திமுக எம்.பி.க்கள் நோட்டீஸ்

மும்பை விமான நிலையத்தில் 2 விமானங்கள் உரசல்; பெரும் விபத்து தவிர்ப்பு

மூணாறில் இருந்து திருவனந்தபுரம், கோழிக்கோடுக்கு புதிய பஸ் சேவை

பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவதற்காக பெற்ற மகளை கொன்ற கொடூர தந்தை கைது