மும்பை,
மும்பை எல்.டி.டி.-திருநெல்வேலி இடையே (வண்டி எண் 22629, 22630) எக்ஸ்பிரஸ் ரெயில் 16 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வந்தது. கோடை விடு முறையையொட்டி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் இந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது. இது குறித்து கொங்கன் ரெயில்வே விடுத்துள்ள அறிக்கையில்,
"வருகிற ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் திருநெல்வேலியில் இருந்து எல்.டி.டி.க்கும், மறு மார்க்கமாக 16-ந்தேதி எல்.டி.டி.யில் இருந்து திருநெல்வேலிக்கும் இயக்கப் படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும். இதில் பொது பெட்டிகள் மற்றும் தூங்கும் வசதி பெட்டிகள் அடங்கும்.
இதன் காரணமாக இரண்டு அடுக்கு குளிர்சாதன பெட்டிகள்- 2, மூன்று அடுக்கு குளிர்சாதன பெட்டிகள்- 6, எகானாமி பெட்டி- 1, முன்பதிவு படுக்கை வசதி பெட்டி- 7, பொதுப்பெட்டிகள்- 4 உள்ளிட்ட 22 பெட்டிகளு டன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.