தமிழக செய்திகள்

பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 6 பேர் கைது

சென்னை கண்ணகிநகரில் பட்டா கத்தியினால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

சென்னை

சென்னையில் சமூக சமூக வலைதளங்களில் சில இளைஞர்கள் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் காட்சி கடந்த இரு நாள்களாக வேகமாக பரவி வருகிரது . இதைப் பார்த்த போலீஸ் உயர் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த சம்பவம் கடந்த 6-ஆம் தேதி கண்ணகிநகரில் நடைபெற்றது என்பது தெரியவந்தது.

இதையடுத்து கண்ணகிநகர்போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர். விசாரணையில், கடந்த 6-ஆம் தேதி இரவு கண்ணகிநகர் பகுதியைச் சேர்ந்த சுனில் என்பவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றதும், அப்போது சுனிலும், அவரது நண்பர்களும் கண்ணகிநகரில் பிரதான சாலை ஒன்றில் மொபெட்டின் மீது கேக்கை வைத்து பட்டாக் கத்தியால் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து போலீசார் கண்ணகிநகர் பகுதியைச் சேர்ந்த சுனில், அவரது நண்பர்களான அதேப் பகுதியைச் சேர்ந்த நவீன்குமார், அப்பு, தினேஷ், ராஜேஷ், கார்த்திக் ஆகிய 6 பேரை இன்று கைது செய்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு