தமிழக செய்திகள்

வெறிநாய் கடித்து 6 மாடுகள் காயம்

வேடசந்தூர் அருகே வெறிநாய்கள் கடித்து 6 மாடுகள் காயம் அடைந்தது.

தினத்தந்தி

வேடசந்தூர் அருகே உள்ள மாமரத்துபட்டியை சேர்ந்தவர் நாகராஜன். இவர் ஒரு பசு மாடு மற்றும் கன்றுகுட்டி வளர்த்து வருகிறார். அதனை தனது வீட்டுக்கு அருகே கட்டி வைத்திருந்தார். நேற்று மதியம் அங்கு வந்த வெறிநாய் ஒன்று கன்றுகுட்டியை கடித்து குதறியது. இதில் கன்றுகுட்டி காயம் அடைந்தது. இதேபோல் அந்த கிராமத்தில் செல்வம் என்பவரது பசு மாட்டையும், நடராஜ் என்பவரது 2 எருமை மாடுகளையும், பழனிசாமி என்பவரது எருமை மாட்டையும், பாலசுப்பிரமணி என்பவரது கன்றுகுட்டியையும் அந்த வெறிநாய் கடித்தது. இதில் நேற்று மட்டும் 4 மாடுகள், 2 கன்றுகுட்டிகள் காயம் அடைந்தது. அந்த நாயை அப்பகுதி மக்கள் விரட்டி சென்றனர். ஆனால் அது தப்பித்து ஓடி விட்டது. இந்த வெறிநாய்கள் தொல்லையால் கிராம மக்கள் பீதியடைந்து உள்ளனர்.

இந்த கிராமத்திற்கு செல்லும் வழியில் சாலயோரம் இறைச்சி கழிவுகளை கடைக்காரர்கள் கொட்டி செல்கின்றனர். அந்த இறைச்சி கழிவுகளை தின்று விட்டு நாய்கள் வெறி பிடித்து சுற்றி திரிவதாக கிராம மக்கள் புகார் கூறி வருகின்றனர். எனவே சாலையோரம் இறைச்சி கழிவுகளை காட்டுபவர்கள் மீது பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்க விடுத்துள்ளனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்