தமிழக செய்திகள்

நாகர்கோவிலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 6-ந்தேதி பயணம்

நாகர்கோவிலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 6-ந் தேதி செல்கிறார். தோள் சீலை போராட்ட 200-வது ஆண்டு நினைவு மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.

தினத்தந்தி

நாகர்கோவில்,

ஏற்றத்தாழ்வு மற்றும் அடக்குமுறைக்கு எதிரான சமூக நீதி போராட்டம் கடந்த 1822-ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தொடங்கியது. அதன்பிறகு பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன.

இந்த போராட்டத்தில் பங்கேற்ற வீரர்களை போற்றுகிற வகையிலும், அவர்களது பெருமைகளை இளைஞர்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலும் தோள் சீலை போராட்ட மாநாடு வருகிற 6-ந் தேதி நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடக்கிறது. இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார்.

தலைவர்கள்

மேலும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் கட்சி சார்பில் பீட்டர் அல்போன்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் முத்தரசன் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

அதைத்தொடர்ந்து மறுநாள் 7-ந் தேதி காலை மாநகராட்சி கட்டிடத்தையும், ஒழுகினசேரியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் கருணாநிதி சிலையையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு