தமிழக செய்திகள்

செங்கல்பட்டு விபத்து: பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு- தலைமறைவாக இருந்த அரசு பஸ் டிரைவர் கைது

செங்கல்பட்டு சாலை விபத்தில் 7 பேர் பலியான சம்பவத்தில் அரசு பஸ் டிரைவர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

தினத்தந்தி

மதுராந்தகம்,

செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு என்ற இடத்தில் கடந்த 8-ம் தேதி காலை இரும்பு கம்பிகள் ஏற்றிச்சென்ற லாரியின் மீது சென்னையிலிருந்து சிதம்பரம் நோக்கி சென்ற அரசு பஸ் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இவ்விபத்தில் பலத்த காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சாலை விபத்தில் அரசு பஸ் டிரைவர் முரளி தப்பி ஓடிவிட்டார். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் விபத்துக்கு காரணமாக அரசு பஸ் டிரைவர் முரளி(வயது44) அச்சரப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இன்று சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதற்கு பின்னர் மதுராந்தகம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்