தமிழக செய்திகள்

கூடலூர் அருகே கார் கவிழ்ந்து 6 பேர் படுகாயம்

கூடலூர் அருகே கார் கவிழ்ந்து 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

தினத்தந்தி

தேனி மாவட்டம் கூடலூர் ஓம்சக்திநகரை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு கார் ஒன்று நேற்று கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வாழைவீடு பகுதி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த காரை கூடலூரை சேர்ந்த வைரவன் என்பவர் ஓட்டினார். கூடலூர் அருகே குமுளி மலைப்பாதையில் 2-ம் மைல் பகுதியில் சென்றபோது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மின்கம்பத்தில் மோதியது. அத்துடன் சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வைரவன், தோட்ட தொழிலாளர்கள் முருகேஸ்வரி, சந்தியா, கலையரசி, உமா, ஈஸ்வரி ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் காயமின்றி தப்பினர். இதையடுத்து படுகாயம் அடைந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து வைரவன் மட்டும் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து குமுளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்