தமிழக செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகேஆட்டோ கவிழ்ந்து 6 மாணவர்கள் காயம்

உளுந்தூர்பேட்டை அருகே ஆட்டோ கவிழ்ந்து 6 மாணவர்கள் காயமடைந்தனா.

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வைப்பாளையம் கிராமத்தை சேர்ந்த 7 மாணவ, மாணவிகள், கெடிலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள். நேற்று இவர்கள் ஒரு ஆட்டோவில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். பள்ளிக்கு அருகே, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்தது. இதில் 4 மாணவர்கள், 2மாணவிகள் என்று 6 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும், திருக்கோவிலூர் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இவர்களில் ஒரு மாணவி மட்டும் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பக்கம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு உாய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு