தமிழக செய்திகள்

64 அடி பிரம்மாண்ட சிலை கிருஷ்ண‌கிரி சென்றடைந்த‌து

64 அடி பிரம்மாண்ட சிலை கிருஷ்ண‌கிரிக்கு சென்று அடைந்து உள்ளது.

தினத்தந்தி

கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு ஈஜிபுரா பகுதியில் கோதண்ட ராம சாமி கோயில் உள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோயிலில் விஸ்வரூப மகாவிஷ்ணு மற்றும் ஆதிசேஷன் சிலை அமைக்க கோயில் அறக்கட்டளை சார்பில் முடிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து சிலைக்கான கல் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கொரக்கோட்டையில் உள்ளது தெரிய வந்தது. இங்குள்ள குன்றில் இருந்து எடுக்கப்பட்ட கற்களை வெட்டி 64 அடி உயரமும் 24 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்ட சாமி சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டது.

முழுமையாக செதுக்கப்படாத இந்த சிலை இன்னும் செதுக்க வேண்டிய பெரும் பாறையுடன் 160 டயர்கள் கொண்ட ராட்சத கார்கோ லாரியில் வந்தவாசி, வேலூர், கிருஷ்ணகிரி வழியாக பெங்களூரு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த நிலையில் பல்வேறு தடைகளை கடந்து இந்த சிலை கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை பகுதிக்கு வந்தடைந்து உள்ளது.

சிலையை கொண்டு செல்வதற்கு ஏதுவாக குறுகிய அளவிலான சாலைகளில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பிரம்மாண்ட சிலையை காண, அப்பகுதியில் உள்ள பக்தர்கள் சாலையில் திரண்டனர். சிலையுடன் செல்பி எடுத்துக்கொண்ட பக்தர்கள், சிலையில், தங்களது கையெழுத்துகளை பதிவிட்டு சென்றனர்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?