தமிழக செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.66 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்துக்கு வந்த பயணியிடம் இருந்த ரூ.66 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

தினத்தந்தி

திருச்சி,

திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது திருச்சியை சேர்ந்த முகமது யூசுப்(வயது 48) என்ற பயணி தனது கைப்பையில் ரூ.66 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர், சிங்கப்பூர் டாலர் மலேசியன் ரிங்கிட் உட்பட வெளிநாட்டு பணகளை எடுத்துச் செல்ல இருந்தது தெரியவந்தது.

இந்த பணத்தினை எடுத்து செல்வதற்கு அவரிடம் எந்த ஆவணமும் இல்லாததால், சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் முகமது யூசுப்புக்கு இந்த வெளிநாட்டு பணம் எவ்வாறு கிடைத்தது என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்

திருச்சி விமான நிலையத்துக்கு வந்த பணியின் ஒருவரிடம் இருந்து 66 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து