தமிழக செய்திகள்

68-வது பிறந்த நாள்: மம்தா பானர்ஜிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் 68-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

தினத்தந்தி

சென்னை,

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் 68-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

மேற்கு வங்காள முதல்-மந்திரியும். எனது அன்பிற்கினிய சகோதரியுமான மம்தா பானர்ஜிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

நல்ல உடல்நலனும், மகிழ்ச்சியும், வெற்றிப்படிகளும் நிறைந்து, இந்தியாவில் மக்களாட்சியின் மலர்ச்சிக்குப் பங்காற்றிடும் வகையில் இந்த ஆண்டு தங்களுக்கு அமைந்திட விழைகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்