தமிழக செய்திகள்

மார்ச் மாதத்தில் 69.99 லட்சம் பயணிகள் மெட்ரோவில் பயணம் - சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம்

மார்ச் மாதத்தில் 69.99 லட்சம் பயணிகள் மெட்ரோவில் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போதுக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு பாதுகாப்பான வசதியை ஏற்படுத்துகிறது.

அந்த வகையில், கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரெயில்களில் 69.99 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். பிப்ரவரி மாதத்தை விட மார்ச் மாதத்தில் 6 லட்சத்து 30 ஆயிரத்து 59 பயணிகள் மெட்ரோ ரெயிலில் அதிகமாக பயணித்துள்ளனர்.

மார்ச் மாதத்தில் மட்டும் க்யூஆர் குறியீடு முறையைப் பயன்படுத்தில் 21,61,453 பயணிகள், பயண அட்டைகளை பயன்படுத்தி 44,76,793 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தில் 3,55,702 பயணிகள் மற்றும் குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 5,393 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்