தமிழக செய்திகள்

69வது பிறந்த நாள்; அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மலரஞ்சலி

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது 69வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

தினத்தந்தி

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் 69வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மலரஞ்சலி செலுத்தினார்.

அவருடன் தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாநிதி மாறன், டி.ஆர். பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தனது பிறந்த நாளை தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் எளிமையாக கொண்டாடுங்கள் என்று அவர் கேட்டு கொண்டார். முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு அவர் கொண்டாடும் முதல் பிறந்த நாள் இதுவாகும்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்