தமிழக செய்திகள்

6வது மெகா முகாம்; அசைவ பிரியர்களுக்காக சனிக்கிழமை நடத்த முடிவு

தமிழகம் முழுவதும் 6வது மெகா தடுப்பூசி முகாம் அசைவ பிரியர்களுக்காக சனிக்கிழமை நடைபெற உள்ளது.

சென்னை,

தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, அசைவம் சாப்பிட்டால், மது அருந்தினால் தடுப்பூசி செலுத்தி கொள்ள கூடாது என கூறி பலரும் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி செலுத்தி கொள்ள தயங்குகிறார்கள். அவர்களின் விருப்பம் நிறைவேறும் வகையில் இந்த வாரம் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் 6வது மெகா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

அனைவரும் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக 2வது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. கடந்த 5வது முகாமை பொறுத்தவரை 11 லட்சம் பேர் 2வது தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டார்கள். 4வது மெகா தடுப்பூசி முகாமில் 10 லட்சம் பேர் 2வது தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டார்கள். வருகிற சனிக்கிழமை 50 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...