தமிழக செய்திகள்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - ஆளுநரிடம் முக.ஸ்டாலின் வலியுறுத்தல்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநரிடம் முக.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தார். சந்திப்பின் போது ராஜிவ் கொலை குற்றவாளிகள் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆளுநர் சந்திப்பின் போது கட்சியின் மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், பொன்முடி, எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், தயாநிதிமாறன் ஆகியோரும் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மு.க.ஸ்டாலின், பேரறிவாளன் உள்பட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தினோம். 7 பேர் விடுதலை விவகாரத்தில் பரிசீலித்து முடிவு செய்வதாக ஆளுநர் கூறினார். 7 பேர் விடுதலைக்கான காலதாமதத்திற்கான சட்ட விளக்கங்களையும் ஆளுநர் தந்தார். 7 பேர் விடுதலை தொடர்பாக மனிதாபிமான அடிப்படையில் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும். ஆளுநருடன் வேறு விஷயங்களும் பேசினோம். அதை வெளியில் சொல்ல முடியாது என்று கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து