தமிழக செய்திகள்

7 பேர் விடுதலை விவகாரம்: ஆளுநரின் ஆவணம் கிடைத்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை - அமைச்சர் சி.வி.சண்முகம்

7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக, ஆளுநரின் ஆவணம் கிடைத்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை பேர் விடுதலையில், தமிழக ஆளுநருக்கே அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறிய நிலையில், குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது. இந்த சூழலில் பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரும் மனு, பிப்ரவரி 9-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில் 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக, ஆளுநரின் ஆவணம் கிடைத்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தாக்கல் செய்த ஆவணம் தமிழக அரசுக்குக் கிடைக்கவில்லை. 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரின் முடிவு பற்றிய ஆவணம் கிடைத்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும். 7 பேரின் விடுதலை குறித்து குடியரசு தலைவரே முடிவு செய்வார் என்று தெரிவித்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்