டாக்டர் ராமதாஸ் 
தமிழக செய்திகள்

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு, தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்; தமிழக கவர்னருக்கு டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்

பேரறிவாளன் விடுதலை குறித்து ஒரு வாரத்தில் தமிழக கவர்னர் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு, 12 நாட்களாகியும் அது குறித்து இன்று வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பேரறிவாளன் விடுதலை குறித்து ஒரு வாரத்தில் தமிழக கவர்னர் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு, 12 நாட்களாகியும் அது குறித்து இன்று வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வக்கீல் அளித்த வாக்குறுதியின்படி கடந்த 25-ந் தேதிக்குள் பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்கப்பட்டிருக்க வேண்டும். உச்சநீதிமன்ற ஆணைப்படி முடிவெடுப்பதாக இருந்தாலும் கூட 28-ந் தேதிக்குள் கவர்னர் தீர்மானித்திருக்க வேண்டும். ஆனால், கெடு முடிந்து 4 நாட்களாகியும் கூட எந்த நகர்வும் நடக்கவில்லை, அதற்கான காரணத்தையும் கவர்னர் மாளிகை இதுவரை தெரிவிக்கவில்லை. இந்த தாமதம் பெரும் மனித உரிமை மீறல் ஆகும். 7 தமிழர் விடுதலை குறித்த உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றத் தீர்ப்புகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் மதித்து தமிழக கவர்னர் செயல்பட வேண்டும். பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு அடுத்த 3 நாட்களில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், அவரையும்,

அவரைத் தொடர்ந்து மற்ற 6 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தமிழக அமைச்சரவையின் பரிந்துரைக்கு தமிழக கவர்னர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்