தமிழக செய்திகள்

மூதாட்டியிடம் நூதன முறையில் 7 பவுன் சங்கிலி அபேஸ்

மூதாட்டியிடம் நூதன முறையில் 7 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

தினத்தந்தி

திருச்சி உய்யகொண்டான் திருமலை விஸ்வாஸ் நகரை சேர்ந்தவர் வையாபுரி. இவருடைய மனைவி கவுசல்யா (வயது 66). நேற்று முன்தினம் கணவன்-மனைவி இருவரும் அம்மா மண்டபத்துக்கு பஸ்சில் சென்றனர். பின்னர், அங்கிருந்து மீண்டும் விஸ்வாஸ்நகருக்கு பஸ்சில் வந்து இறங்கிய இருவரும், இரட்டை வாய்க்கால் அருகே நடந்து சென்றனர். அப்போது, அங்கு வந்த 2 மர்ம நபர்கள் தங்களை போலீசார் என்று அறிமுகம் செய்து கொண்டு அவர்களை மறித்தனர். பின்னர், இந்த பகுதியில் திருடர்கள் நடமாட்டம் இருப்பதால், நகைகளை பறித்துக்கொள்வார்கள், நகையை கழற்றி பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். இதனால் கவுசல்யா தான் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை கழற்றியபோது, அதை மர்மநபர்களில் ஒருவர் வாங்கி காகிதத்தில் பொட்டலம் போட்டு கொடுத்துள்ளார். வீட்டுக்கு வந்து பார்த்தபோது, அதில் சங்கிலிக்கு பதிலாக சிறிய கற்கள் இருந்துள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த கவுசல்யா இதுகுறித்து திருச்சி அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை