தமிழக செய்திகள்

ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் விடுவிப்பு

இலங்கை சிறையில் இருந்து ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் விடுவிக்கப்பட்டனர்.

தினத்தந்தி

ராமேசுவரம்

இலங்கை சிறையில் இருந்து ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் விடுவிக்கப்பட்டனர்.

சிறையில் அடைப்பு

ராமேசுவரத்தில் இருந்து கடந்த 27-ந் தேதி ஒரு விசைப்படகில் மீன் பிடிக்க சென்ற 7 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தது.

அந்த மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

தூதரகத்தில் ஒப்படைப்பு

இந்தநிலையில் இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேசுவரத்தை சேர்ந்த 7 மீனவர்கள் நேற்று பருத்தித்துறை கார்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி, 7 மீனவர்களையும் விடுவித்து உத்தரவிட்டு, படகு உரிமையாளர் அனைத்து ஆவணங்களுடன் வருகிற ஜனவரி 27-ந் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும். இல்லையெனில் படகு இலங்கை அரசுடைமை ஆக்கப்படும் என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை தொடர்ந்து, 7 மீனவர்களும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். விரைவில் அவர்கள் தமிழகம் அழைத்து வரப்படுவார்கள் என்று தெரிகிறது. இருப்பினும், கடந்த 5-ந் தேதி மீன் பிடிக்க சென்ற ராமேசுவரம் மீனவர்கள் 15 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து