தமிழக செய்திகள்

7 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை: குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை மதுரை ஐகோர்ட் உறுதி செய்தது

7 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிக்கு மதுரை ஐகோர்ட் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

தினத்தந்தி

மதுரை,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஏம்பல் என்ற கிராமத்தில் வசித்து வந்த 7 வயது சிறுமியை பூக்கடைக்காரரான சாமிவேல் என்ற ராஜா(26) பலாத்காரம் செய்து பின்னர் சிறுமியின் கழுத்தை அறுத்து கொன்று கண்மாயில் உள்ள புதரில் வீசய கொடூர சம்பவம் கடந்த ஜூலை மாதம் நடந்தது. போலீசார் தீவிர விசாரண நடத்தி ராஜாவை கைது செய்தனர்.

இதையடுத்து 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி ராஜாவுக்கு இரட்டை மரண தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

இதைத் தொடர்ந்து சாமிவேலுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதை உறுதி செய்ய மதுரை ஐகோர்ட்டில் போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், நீதிபதி ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, குற்றவாளி சாமிவேலுக்கு தூக்கு தண்டனை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து