தமிழக செய்திகள்

விவசாயிக்கு 7 ஆண்டுகள் சிறை

5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவசாயிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

தினத்தந்தி

வத்தலக்குண்டு அருகே உள்ள விருவீடு வடக்கு வளையபட்டியை சேர்ந்தவர் அய்யாவு (வயது 65). விவசாயி. கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ந்தேதி இவர், தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்த 11 வயது மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விருவீடு போலீசார், அய்யாவுவை பிடித்து விசாரித்தனர். பின்னர் அவர் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் அவர் மீது திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையின் முடிவில் குற்றம் சாட்டப்பட்ட அய்யாவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,500 அபராதமும் விதித்து நீதிபதி விஜயகுமார் தீர்ப்பளித்தார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது