தமிழக செய்திகள்

தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

திண்டுக்கல் சோலைஹால் பகுதியை சேர்ந்தவர் சிவசந்திரன் (வயது 42). தொழிலாளி. இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு 13 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்ததோடு, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தரப்பில் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசந்திரனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி சரண் வழக்கை விசாரித்தார். இந்த வழக்கின் விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட சிவசந்திரனுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், இந்திய தண்டனை சட்டம் 506-ன் (கொலை மிரட்டல்) கீழ் 2 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு