சென்னை,
தமிழகத்தில் மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை விவரங்களை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக 73 லட்சத்து 31 ஆயிரத்து 302 பேர் காத்திருப்பதாக அறிவித்துள்ளது.
அதில் 34 லட்சத்து 41 ஆயிரத்து 360 பேர் ஆண்கள். 38 லட்சத்து 89 ஆயிரத்து 715 பேர் பெண்கள். 227 பேர் மூன்றாம் பாலினத்தவராகும்.
வேலைக்காக பதிவு செய்தவர்களில் 24 முதல் 35 வயது வரையுள்ளவர்கள் 26 லட்சத்து 86 ஆயிரத்து 932 பேர், 36 முதல் 57 வயது வரை உள்ளவர்கள் 12 லட்சத்து 97 ஆயிரத்து 693 பேர், 58 வயதிற்கு மேற்பட்டவர்கள் 11 ஆயிரத்து 245 பேராகும்.
பதிவு செய்துள்ள 18 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 19 லட்சத்து 9 ஆயிரத்து 646 பேராகும். 19 முதல் 23 வயது வரையுள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 25 ஆயிரத்து 786 ஆகும்.
மாற்றுத்திறனாளிகளில் மொத்தம் 1 லட்சத்து 38 ஆயிரத்து 698 பேர் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர். அவர்களில் ஆண்கள் 92 ஆயிரத்து 10 பேர். பெண்கள் 46 ஆயிரத்து 688 பேர்.