தமிழக செய்திகள்

73-வது பிறந்த நாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொண்டர்களிடம் வாழ்த்து பெறுகிறார்

மு.க.ஸ்டாலின் தனது 73-வது பிறந்த நாளை, நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடுகிறார்.

சென்னை,

திமுக தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 73-வது பிறந்த நாளை, நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடுகிறார். அதையொட்டி, காலை 8 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.

தொடர்ந்து, காலை 8.30 மணிக்கு வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திற்கு வரும் அவர், மலர்வளையம் வைத்து மரியாதை செய்கிறார்.

அதன்பிறகு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேராக காலை 9 மணிக்கு தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் வருகிறார். அங்குள்ள கலைஞர் அரங்கத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.