தமிழக செய்திகள்

காஞ்சீபுரம் மாநகராட்சியில் 75 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்; ரூ.11 ஆயிரம் அபராதம்

காஞ்சீபுரம் மாநகராட்சியில் 75 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்து அபராதமும் விதித்தனர்.

தினத்தந்தி

தமிழகம் முழுவதும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை தமிழக அரசு தடை செய்துள்ளது. தடை செய்த பின்னரும் மறைமுகமாக பல இடங்களில் பிளாஸ்டிக் பைகளை, பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனை தடுப்பதற்காக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தும், அபராதம் விதித்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக காஞ்சீபுரம் மாநகராட்சியில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி உத்தரவின்படி, மாநகராட்சி ஆணையர் கண்ணன் அறிவுறுத்தலின் பேரில் மாநகராட்சியின் சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ் குமார், குமார், முகமது இக்பால், லட்சுமி பிரியா உள்பட 10 பேர் கொண்ட குழுவினர் மாநகராட்சிக்குட்பட்ட பூக்கடைசத்திரம், செங்கழுநீரோடை வீதி, மீன் மார்க்கெட் போன்ற பகுதிகளில் உள்ள பூக்கடைகள், சாலையோர கடைகள், மளிகை கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டும் பயன்படுத்த கூடிய சுமார் 75 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்தனர்.

பின்னர், கடை உரிமையாளர்களிடம் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்தனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு