தமிழக செய்திகள்

7.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழக்கு: நடப்பு ஆண்டிலேயே நிறைவேற்ற வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

7.5 சதவிகித உள் ஒதுக்கீடு சட்ட மசோதாவை நடப்பு ஆண்டிலேயே நிறைவேற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

மதுரை,

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதற்கு கவர்னர் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.

இந்நிலையில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு சட்ட மசோதாவை நடப்பு ஆண்டிலேயே நிறைவேற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், சட்ட மசோதா இந்த வருடம் நிறைவேறாவிட்டால் நீட் தேர்வு எழுதிய 8 மாணவர்கள் மட்டுமே சேர வாய்ப்பு உள்ளது. நடப்பு ஆண்டிலேயே சட்ட மசோதாவை நிறைவேற்றி 400 மாணவர்கள் இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர வேண்டும்.

7.5 சதவிகித உள் ஒதுக்கீடு விவகாரத்தில் வரும் திங்களன்று நல்ல முடிவு வரும் என்று நம்புகிறோம். ஆளுநர் நீதிமன்றத்திற்கு பதில் கூற வேண்டிய அவசியமில்லை, ஆனாலும், பொறுப்புள்ள அதிகாரிகள் சரியான நேரத்தில் சரியான முடிவெடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடுதான் விதிகள் வகுக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை