தமிழக செய்திகள்

ஐதராபாத்திலிருந்து 75 ஆயிரம் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி சென்னை வந்தது

ஐதராபாத்திலிருந்து 75 ஆயிரம் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி இன்று சென்னை வந்தடைந்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில், நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தொற்றைக் கட்டுப்படுத்த, 'பாரத் பயோடெக்' நிறுவனத்தின், 'கோவாக்சின்' மற்றும், சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் ஆகியவை பொது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா வேகமாக பரவி வருவதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் ஐதராபாத்திலிருந்து 75 ஆயிரம் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி இன்று சென்னை வந்தடைந்துள்ளது.

முன்னதாக பிரேசில், இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் காணப்படும் உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசி சிறப்பாக செயல்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்