தமிழக செய்திகள்

750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

ஜோலார்பேட்டை அருகே 750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையத்திலிருந்து, காட்பாடி, ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, பச்சூர் மற்றும் ஆந்திர மாநிலம் மல்லானூர் வரை குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு துணைபோலீஸ் சூப்பிரண்டு நந்தகுமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் வனிதா, சப்-இன்ஸ்பெக்டர் முத்தீஸ்வரன், செந்தில் உள்ளிட்ட போலீசார் நேற்று ரெயில்களிலும், ரெயில் நிலையங்களிலும் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா என்பது குறித்து சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஜோலார்பேட்டையை அடுத்த பச்சூர் ரெயில்நிலையத்தில் வெளி மாநிலத்திற்கு ரெயில் மூலம் கடத்துவதற்காக 15 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 750 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசாரை கண்டதும் தப்பி சென்ற அரிசியை பதுக்கி வைத்திருந்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து