தமிழக செய்திகள்

75-வது சுதந்திர தின விழா: சென்னையில் இறுதி நாள் ஒத்திகை அணிவகுப்பு நிகழ்ச்சி

75-வது சுதந்திர தின விழா சென்னை கோட்டையில் நடைபெறுவதை முன்னிட்டு இன்று அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி மேற்கொண்டனர்.

தினத்தந்தி

சென்னை,

75-வது சுதந்திர தின விழாவை வருகிற 15-ந்தேதி, சென்னை கோட்டையில் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு 6, 11, 13-ந்தேதிகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த 6-ந் தேதி மற்றும் 11-ந் தேதி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. ஒத்திகை நடைபெறும் நாட்களில் காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் நேரம் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மெரினா கடற்கரை முதல் தலைமை செயலகம் வரை போக்குவரத்து தடைசெய்யப்பட்டது.

இந்நிலையில் இறுதி நாள் ஒத்திகை நிகழ்ச்சி இன்று தொடங்கி உள்ளது. காலை தொடங்கிய காவல் துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சியானது தற்போது சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற்றது. படைவீரர்களின் அணிவகுப்பு, விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிகள் போன்றவற்றை ஒத்திகையின் போது நடத்தப்பட்டது.

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்