சென்னை,
சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான முதன்மைத் தேர்வு முடிவில் அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையத்தில் படித்த 79 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக, அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையத்தின் பயிற்சித் துறை தலைவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும் அகில இந்திய குடிமை பணித்தேர்வு பயிற்சி மையம் யு.பி.எஸ்.சி. சார்பில் நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு முதல் நிலைத்தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த பயிற்சி மையத்தில் 2026-ம் ஆண்டில் முதன்மை தேர்வுக்கு படித்த ஆர்வலர்களில் 29 பெண்கள், 4 மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதன் முறையாக மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் உள்பட 79 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்போது இந்த மையத்தின் சார்பாக முதன்மைத் தேர்வில் தகுதி பெற்ற தேர்வர்களுக்கு ஒரு மாதகால பயிற்சியும், மாதிரி நேர்முகத் தேர்வும் நடத்தப்பட உள்ளது. நேர்முகத்தேர்வுக்கான ஒரு மாத கால பயிற்சி விரைவில் தொடங்கப்படுவது குறித்தான அறிவிப்பு இம்மாத இறுதிவாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும்.
இந்த பயிற்சி மையத்தில், பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் மட்டுமல்லாமல் முதன்மைத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள, தமிழ்நாட்டைச் சார்ந்த பிற தேர்வர்களும் இம்மையத்தால் நடத்தப்பட உள்ள மாதிரி நேர்முகத்தேர்வில் பங்கு பெற அனுமதிக்கப்படுவர்.
மேலும் விவரங்களுக்கு, 044-24621475 என்ற தொலைபேசி எண் வாயிலாகவும், 9345766957 என்ற வாட்ஸ்-அப் எண் மூலமாக வும், aicscc.gov@gmail.com என்ற அலுவலக மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.