மதுரை,
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவிச்சந்திரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மதுரை மத்திய ஜெயிலில் சிறைவாசம் அனுபவித்து வந்தார்.
ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்ககோ அவான் தாயார் ராஜேஸ்வரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17ந் தேதி ஒரு மாத காலம் பரோல் வழங்கி ஐகோர்ட் உத்தரவிட்டது.
ரவிச்சந்திரன் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்திற்கு அருகில் உள்ள கிராமத்துக்கு சென்றார். அங்கு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனால், ரவிச்சந்திரனின் விடுப்பு காலம் கடந்த ஆண்டு டிசம்பர்17 முதல் 2022 ஜனவரி 15ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகு ஜனவரி 16,பிப்ரவரி 14, பிப்ரவரி 15மார்ச் 16, மார்ச் 17ஏப்ரல் 15ந்தேதி என 6 முறை நீட்டிக்கப்பட்டது.
ராஜீவ் கொலை கைதி ரவிச்சந்திரன் விடுமுறை காலம் இன்றுடன் முடிகிறது. இதற்கிடையே ரவிச்சந்திரனின் தாயார் மகனின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு விடுப்பு காலத்தை நீட்டிக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதன் அடிப்படையில் ரவிச்சந்திரனுக்கு நாளை முதல் அடுத்த மாதம் 15ந் தேதி வரை பரோல் வழங்கப்பட்டு உள்ளது.