தமிழக செய்திகள்

அன்பழகனுக்கு 8 அடி உயரத்தில் வெண்கல சிலை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்..!

மறைந்த முன்னாள் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் வெண்கல முழு உருவச் சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

தினத்தந்தி

சென்னை,

திமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரான அன்பழகனிற்கு டி.பி.ஐ வளாகத்தில் வெண்கல சிலை நிறுவப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி கடந்த ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு 8 அடி உயரம் கொண்ட சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. சிலை வடிவமைக்கும் பணியினை மீஞ்சூர் அடுத்த புதுப்பேட்டில் சிற்பி தீனதயாளன் செய்தார்.

இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ வளாகத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் 8 அடி உயரம் கொண்ட வெண்கல முழு உருவச் சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அதன் பின்னர் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு முதல்-அமைச்சர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, மெய்யநாதன், உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்