தமிழக செய்திகள்

மதுரவாயலில் ரவுடியை வெட்டிக்கொன்ற வழக்கில் 8 பேர் கைது

மதுரவாயலில் ரவுடியை வெட்டிக்கொன்ற வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

மதுரவாயல் அடுத்த நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் திருட்டு ராஜேஷ் (வயது 23). இவர் மீது வழிப்பறி, கொலை மிரட்டல், கொலை என பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மதுரவாயல், கந்தசாமி நகர் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றபோது வழிமறித்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது.

இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் உதவி கமிஷனர் சுப்பிரமணி, இன்ஸ்பெக்டர் சிவானந்த் தலைமையில் போலீசார் தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக பூந்தமல்லி அடுத்த கூடப்பாக்கத்தை சேர்ந்த பன்னிசுரேஷ் (38), லொட்டை பாண்டி உட்பட 8 பேரை மதுரவாயல் போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர்.

ரவுடியாக வலம் வந்த பன்னிசுரேஷ் மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளது. இந்த நிலையில், ஏரியாவில் யார் பெரிய ஆளாக வருவது என்ற போட்டியில் பன்னி சுரேசுக்கும், திருட்டு ராஜேசுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருட்டு ராஜேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து பன்னி சுரேசை வெட்டிக்கொலை செய்ய முயன்றதும் தெரியவந்தது.

இந்த மோதலில் முந்தி கொண்டு திருட்டு ராஜேஷை பன்னி சுரேஷ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து