தமிழக செய்திகள்

பெண்ணிடம் 8½ பவுன் நகை அபேஸ்

மேல்மலையனூர் அருகே பெண்ணிடம் 8½ பவுன் நகையை அபேஸ் மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேல்மலையனூர்,

மேல்மலையனூர் அருகே தேவனூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடாஜலம் மனைவி தரணி (வயது 32). இவர் நேற்று முன்தினம் தனது மாமனார் ஏழுமலையுடன் மோட்டார் சைக்கிளில் பழைய 8 பவுன் நகையை மாற்றிவிட்டு புதிய நகைகள் வாங்குவதற்காக செஞ்சியில் உள்ள ஒரு குறிப்பிட்ட கடைக்கு சென்றார். ஆனால் அந்த கடை பூட்டியிருந்ததால், அவர்கள் நகையை மாற்றாமல் வீட்டுக்கு புறப்பட்டனர். நகைபையை மோட்டார் சைக்கிளில் மாட்டியிருந்தனர். கன்னலம் ஆற்றுப்பாலம் அருகில் வந்தபோது அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தனர். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர், முகவரி கேட்பது போல் நடித்து ஏழுமலையின் மோட்டார் சைக்கிளில் இருந்த தரணியின் நகை பையை அபேஸ் செய்து கொண்டு தப்பிச்சென்றார். இது குறித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்