தமிழக செய்திகள்

தஞ்சை மாவட்டத்தில் 8 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

தஞ்சை மாவட்டத்தில் 8 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் 8 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் துறைமுகங்களில் படகுகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

4,500 நாட்டுப்படகு மீனவர்கள்

தஞ்சை மாவட்டத்தில் கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிபட்டிணம், சின்னமனை, பிள்ளையார் திடல், சேதுபாவாசத்திரம், கழுமம்குடா, காரங்குடா, சம்பைபட்டிணம், மந்திரிபட்டினம், அண்ணாநகர் புதுத்தெரு, செம்பியன்மாதேவிபட்டிணம், கணேசபுரம் உள்பட 32-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் சுமார் 4,500 நாட்டுப்படகுகளும், மல்லிபட்டிணம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் சுமார் 146 விசைப்படகுகளும் உள்ளன.

மீன்பிடிக்க செல்லவில்லை

விசைப்படகு மீனவர்கள் திங்கள், புதன், சனி ஆகிய தினங்களிலும், பிற தினங்களில் நாட்டுப்படகு மீனவர்களும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்தநிலையில் வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என தஞ்சை மாவட்ட மீன்வள துறை உதவி இயக்குனர் சிவக்குமார் எச்சரிக்கை விடுத்தார்.

இதையடுத்து நேற்று கடலுக்கு செல்லவேண்டிய நாட்டுப்படகு மீனவர்கள் 8 ஆயிரம் பேர் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக நாட்டுப்படகுகள் அனைத்தும் துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்