தமிழக செய்திகள்

நீட் தேர்வின் தாக்கம் குறித்து 86,342 பேர் கருத்து - நீட் தேர்வு ஆய்வுக்குழு தலைவர் ஏ.கே.ராஜன்

நீட் தேர்வின் தாக்கம் குறித்து 86,342 பேர் கருத்து தெரிவித்துள்ளனர் என்று நீட் தேர்வு ஆய்வுக்குழு தலைவர் ஏ.கே.ராஜன் கூறினார்.

சென்னை,

நீட் தேர்வு குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவின் மூன்றாவது கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பினார் செய்தியாளர்கள் சந்திப்பில் ஏ.கே. ராஜன் கூறியதாவது:-

நீட் தேர்வின் தாக்கம் குறித்து 86,342 பேர் கருத்துத் தெரிவித்துள்ளனர். நீட் தேர்வு வேண்டாம் என பலரும் கருத்துகள் தெரிவித்துள்ளனர். நீட் தேர்வுக்கு ஆதரவாகவும் கருத்துகள் வந்துள்ளன. நீட் குறித்து சிலர் விரிவான கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

அனைத்து கருத்தகளும் ஆராயப்பட்ட பிறகே அறிக்கை தாக்கல் செய்யப்படும். அனைத்துக் கருத்துகளும் நன்கு ஆராய்ந்து ஒருமாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய முயற்சி செய்து வருக்கிறோம். ஆய்வு முடியாவிட்டால் தள்ளிப் போகவும் வாய்ப்புள்ளது. நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்யும் குழுவின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் வரும் திங்கள் கிழமை நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்