தமிழக செய்திகள்

குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு இதுவரை 9,10,644 பேர் விண்ணப்பித்துள்ளனர்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு இதுவரை 9,10,644 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-2, 2ஏ பணிகளுக்கு விண்ணப்பிப்பது மற்றும் தேர்வு நடத்துவது தொடர்பான அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. பிப்ரவரி மாதம் 23-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, இந்த 5 ஆயிரத்து 529 காலி இடங்களுக்கு விண்ணப்பிக்க மார்ச் 23-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. தேர்வு வரும் மே மாதம் 21-ம் தேதி நடை பெற உள்ளது.

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி என்ற நிலையில் இதுவரை 9,10,644 பேர் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மேலும், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து