தமிழக செய்திகள்

9 முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிகளுக்கு வர வேண்டாம்

9 முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிகளுக்கு வர வேண்டாம் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3-வது வாரம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. தொடர்ந்து நோய்த்தொற்றின் தாக்கம் குறையாததால் பள்ளிகளில் நேரடி வகுப்புகளாக இல்லாமல், ஆன்லைன், கல்வித் தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.

அதன் பின்னர், கடந்த ஜனவரி மாதம் 19-ந் தேதி, பொதுத்தேர்வை எழுத இருக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து கடந்த 8-ந் தேதி 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு வகுப்புகள் தொடங்கின. அதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும்? தேர்வுக்கு தயாராகுவதற்கு கால அவகாசம் இருக்குமா? என்பதெல்லாம் மாணவ-மாணவிகளின் எண்ண ஓட்டத்தில் ஓடிக்கொண்டு இருந்தன.

இந்த நிலையில், தமிழகத்தில் 2020-21 ஆம் கல்வியாண்டில் 9, 10, 11-ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார்.

இந்த நிலையில் தமிழகத்தில் 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என அறிவிப்பு வெளியான நிலையில் நாளை முதல் 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு வர வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை