தமிழக செய்திகள்

வீட்டில் பதுங்கிய 10 அடி நீள ராஜநாகம் பிடிபட்டது

செங்கோட்டை அருகே வீட்டில் பதுங்கிய 10 அடி நீள ராஜநாகம் பிடிபட்டது.

தினத்தந்தி

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே உள்ள தெற்கு மேடு கிராமத்தை சேர்ந்தவர் மாடசாமி. விவசாயியான இவரது வீட்டில் வாசல் பக்கம் இரும்பு பீரோவில் துணிகளை வைத்து உள்ளார். நேற்று காலையில் மாடசாமி பிரோவை திறக்க முயன்றபோது பீரோவிற்கு அடியில் ஏதோ சத்தம் வந்தது. அவர் பார்த்தபோது, ராஜநாகம் பதுங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து செங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறப்பு அலுவலர் செல்வன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 10 அடி நீளம் கொண்ட ராஜநாகத்தை உயிருடன் பிடித்தனர். பின்னர் அதை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்