தமிழக செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது

வீட்டிற்குள் புகுந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது.

இலுப்பூர் அருகே மேட்டுச்சாலை பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். இவரது வீட்டிற்குள் மலைப்பாம்பு புகுந்து விட்டதாக அவர் இலுப்பூர் தீயணைப்பு அலுவலகத்திற்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக உயிருடன் பிடித்து சாக்கு பையில் அடைத்தனர். பின்னர் பிடிபட்ட மலைப்பாம்பை தீயணைப்புதுறையினர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறையினர் மலைப்பாம்பை நார்த்தாமலை காப்புகாட்டில் கொண்டு விட்டனர்.