தமிழக செய்திகள்

ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த கரடி சிக்கியது

நீலகிரி மாவட்டம் பந்தலூர் ரிச்மென்ட், இண்கோ நகர், உப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கரடி ஊருக்குள் புகுந்து வந்தது.

தினத்தந்தி

பந்தலூர்,

நீலகிரி மாவட்டம் பந்தலூர் ரிச்மென்ட், இண்கோநகர், உப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கரடி ஊருக்குள் புகுந்து வந்தது. அங்குள்ள வீடுகளின் கதவை உடைத்து, சமையல் அறைக்குள் நுழைந்து உணவு பொருட்களை தின்றது. மேலும் கோவில்களின் கதவுகளை உடைத்து கரடி அட்டகாசம் செய்து வந்தது. பந்தலூர் பஜாருக்குள் இரவு, பகல் நேரங்களில் சாலையில் கரடி உலா வந்தது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்று பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து வனத்துறையினர் சில இடங்களில் கூண்டுகள் வைத்தனர். ஆனால், கரடி சிக்காமல் கடந்த 2 மாதங்களாக வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்தது.

இந்தநிலையில் அத்திமாநகரில் தேன் வைத்த கூண்டில் நேற்று முன்தினம் இரவு கரடி சிக்கியது.

வனத்துறையினர் கரடியை கூண்டுடன் வாகனத்தில் ஏற்றி, முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து