கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

திருவள்ளூரில் தி.மு.க. பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

நாட்டு வெடிகுண்டு வீசியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அபிஷா பிரியவர்ஷினி. இவரது கணவர் ஜெகன். தி.மு.க. பிரமுகரான இவரது வீட்டில் கும்பல் ஒன்று நேற்று வெடிகுண்டு வீசி உள்ளது. இந்த வெடிகுண்டு வீட்டின் வெளிப்புற கேட்டில் விழுந்ததால் நல்வாய்ப்பாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால், வெடித்த நாட்டு வெடி குண்டால் ஜன்னல் கண்ணாடி உள்ளிட்டவை சேதமடைந்தது.

அதே போல், அந்த கும்பல் சிறுனியம் காலனி பகுதியில் உள்ள சரண்ராஜ் என்பவரின் காரை உடைத்து விட்டு அங்கு இருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். மாமுல் கேட்டு நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். .

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து